ஸ்ரீராம் ராகவன்
இயக்கத்தில்
விஜய் சேதுபதி
நடித்து வரும்
பாலிவுட்
படத்தில் நடிகை
ராதிகா
சரத்குமார் இணைந்துள்ளார். பாலிவுட்டில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம், இவர் ஜானி கத்தார், ப்த்லாபூர் , அந்தாதுன் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது இவர்
மெர்ரி கிறிஸ்துமஸ்
என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை சல்மான் கானுக்காக உருவாக்கப்பட்ட கதையாம் ஆனால் திடீரென அவர் நடிக்க முடியாமல் போனதால் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிம்புவின் நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிடு…!
சல்மான் கானை மனதில் வைத்து ஸ்ரீராம் ராகவன் கதை எழுதி உள்ளார், கதையும் சல்மானுக்கு மிகவும் பிடித்து விட்டதாம், ஆனால், சல்மானின் படம் என்றால் மாஸான சண்டைகள், ஆட்டம் பாட்டம் என படம் முழுக்க சும்மா மிரட்டலா இருக்குமாம்.
இதனால்,இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், த்ரில்லர் கதைக்கு இது எல்லாம் செட் ஆகாது என்பதால் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடித்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ராதிகா இணைந்துள்ளார். அவர் போலீஸ் உடையில் காணப்படுகிறார். வெளியாகியுள்ள புகைப்படங்களில்
கத்ரினா
கைப் உடன் ராதிகாவும் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!