பிருந்தாமாஸ்டர் இயக்கும் இரண்டாவது திரைப்படம்….! ஹீரோ யாரு தெரியுமா…?

பிரபல நடன இயக்குனர் இயக்கத்தில் நடிகர்
விஜய் சேதுபதி
நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர்
பிருந்தா
மாஸ்டர். நீண்ட காலமாக சினிமாவில் பயணித்து வரும் இவர், ‘
ஹே சினாமிகா
’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகராக
துல்கர் சல்மான்
கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தில்
காஜல் அகர்வால்
மற்றும்
அதிதி ராவ்
ஹைடாரி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.

சிம்புவின் நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் அப்டேட் வெளியிடு…!

இந்த படத்தை அடுத்து பிருந்தா மாஸ்டர் இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளராம்.‘ஹே சினாமிகா’ படத்தை தயாரித்த ஜியோ ஸ்டியோஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர்
ஸ்ரீராம் ராகவன்
இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும்
விடுதலை
படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.