தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைப் ஜோடி சேர்க்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை கத்ரீனா கைப் இணையந்துள்ளார். இந்த படத்தின் மூலம் கத்ரீனா கைப் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், மேரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பில் கத்ரீனா மற்றும் ராதிகாவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
இந்த புகைப்படத்தில் மலர் படம் பதித்த உடையுடன் கத்ரீனா கைப் ஒரு பக்கம் அமர்ந்திருக்க மறுபுறம் ராதிகா போலீஸ் உடையில் அமர்ச்திருக்காறார். இந்த படத்தை மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ரமேஷ் தௌராணியின் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
2021 டிசம்பரில் விக்கி கௌஷலுடன் திருமணமான உடனேயே கத்ரீனா கைப் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ”புதிய ஆரம்பம். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுக்காக இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் மீண்டும் படப்பிடிப்பில்! நான் எப்போதுமே ஸ்ரீராம் சாருடன் பணிபுரிய விரும்புவேன், த்ரில்லர்களைக் காண்பிக்கும் கதைகளில் அவர் ஒரு மாஸ்டர். இந்த படத்தில் அனைவரடுனமு் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. என்று கூறியுள்ளார்.
விக்கி கௌஷலுடனான திருமணத்திற்குப் பிறகு கத்ரீனாவின் முதல் படம் மேரி கிறிஸ்துமஸ். இந்த படம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர கத்ரீனா. டைகர் 3, ஜீ லே ஜாரா மற்றும் போன் பூட் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“