மரியுபோலில் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் காணாமல் போவதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகர மேயர் Vadym Boichenko,சமீபத்திய நிலைமை குறித்து பேசுகையில், மங்குஷ் கிராமத்தில் பெரிய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தினார்.
மரியுபோலில் தங்கள் குற்றங்களுக்கான தடயங்களை ரஷ்ய படைகள் அழித்து வருவதாகவும், Donetsk பகுதியில் உள்ள மங்குஷில் உள்ள பெரிய கல்லறைகளில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை மறைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக மரியுபோல் நகரம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
மரியுபோலில் அவர்கள் செய்த குற்றங்களை ரஷ்ய படைகள் மறைக்கிறார்கள்.
எங்கள் மதிப்பீடுகளின்படி, நகரில் எதிரி பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை! ஜேர்மனி அறிவிப்பு
நகரில் உள்ள நகராட்சி சேவைகளில் இருந்தும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் அந்த உடல்களை நேரில் பார்த்துள்ளனர், இப்போது அந்த உடல்கள் காணாமல் போவதை நாங்கள் காண்கிறோம்.
ரஷ்யப் படைகள், மரியுபோலில் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை டிரக்குகளில் எடுத்துச்சென்று கிழக்கு நகரத்தில் குழி தோண்டி புதைக்கின்றனர்.
இவை போர்க்குற்றங்கள், அவர்கள் இந்த போர்க்குற்றங்களை மறைக்கிறார்கள்.
மரியுபோலில் நடப்பது கொடூரமான இனப்படுகொலை, குடியிருப்பாளர்கள் சித்திரவதை மற்றும் தவறாக நடத்தப்பட்ட சம்பவங்கள் பல இருப்பதாகவும் மரியுபோல் நகர மேயர் Vadym Boichenko தெரிவித்துள்ளார்.