இந்தியா கச்சா எண்ணெய் தேவைக்கு எப்படி வெளிநாட்டு இறக்குமதி மட்டுமே அதிகளவில் நம்பியிருக்கிறதோ, மின்சார உற்பத்திக்கும் நிலக்கரியை மட்டுமே அதிகளவில் நம்பியிருக்கிறது. ஆனால் நிலக்கரியில் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால் இந்தியாவில் அதிகப்படியான வளம் உள்ளது, இதனால் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்து வருகிறோம்.
இந்நிலையில் இந்தியாவில் சுமார் 12 மாநிலத்தில் அதிகப்படியான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு, தற்போது நாட்டின் மின்சார உற்பத்தி அளவு உள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்க தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!
நிலக்கரி
இந்திய பயன்படுத்தும் மின்சாரத்தில் சுமார் 75 சதவீதம் நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார உற்பத்தி ஆலையில் 24 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு வைத்திருக்க வேண்டும், ஆனால் வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
கோல் இந்தியா
இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதம் கோல் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததுள்ள இந்திய பொருளாதாரம், உற்பத்தி அதிகரிப்பு, கோடைக் காலம் தாக்கம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணிக்காமல் நிலக்கரியைக் குறைவான அளவில் உற்பத்தி செய்து தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு
இதனாலேயே தற்போது மின்சார உற்பத்தி தளத்தில் நிலக்கரிக்குக் கடுமையாகத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏப்ரல் முதல் பாதியில் இருந்து கோல் இந்தியா உற்பத்தி அளவு 27% அதிகரித்துள்ளது, ஆனாலும் தற்போதைய மின்சாரத் தேவைக்கும் உற்பத்திக்கும் போதுமானதாக இல்லை.
சரி இந்த நிலையைச் சமாளிக்க என்ன தான் வழி.. ஒரு வழி இருக்கும்..
மின்சாரம், நிலக்கரி, ரயில்வே அமைச்சகம்
மின்வெட்டு அதிகரித்துள்ள வேளையில் மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சகங்கள் அவசரகால அடிப்படையில் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உருவாகியுள்ளது. பழி போடும் விளையாட்டு தான் எப்போதும் மின்சாரத் துறையைப் பாதிக்கிறது என மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் அசோ குரானா கூறியுள்ளார்.
நிலக்கரி இருப்பு
கோல் இந்தியா, மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பை விரைவில் மேம்படுத்தும் வகையில் உற்பத்தியை அதிகரித்து ரயில்வே துறையுடன் இணைந்து வேகமாக மின் உற்பத்தி தளத்திற்கு நிலக்கரியை கொண்டு சேர்க்க முடிவு உறுதி அளித்துள்ளது.
முக்கியப் பிரச்சனை
ஆனால் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்ல போதுமான ரயில்வே ரேக்குகள் இல்லாத நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது. இதேவேளையில் மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி நிலக்கரி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கவும் கோல் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
15 நாள்
தற்போது மத்திய அமைச்சகங்கள் மத்தியில் இருக்கும் திட்டம் மற்றும் உற்பத்தி வேகத்தின் மூலம் அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் நிலைமை சீரடையும். ஆனால் இதேவேளையில் வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி பெரிய அளவில் அதிகரிக்கப்படும்.
why India facing power and coal shortage? how can the issue be addressed?
why India facing power and coal shortage? how can the issue be addressed? மின்சாரத் தட்டுப்பாட்டை இதுதான் ஓரே வழி..! மத்திய அரசு கையில் தான் எல்லாமே..!