சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதனிடையே சசிகலா ஆன்மீகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால், அதிமுகவில் சசிகலாவை இணைய விடமாட்டோம் என எடப்பாடிபழனிசாமி தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை மீட்டு எடுப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவோம். அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப் போராட்டம் நடத்துகிறார். விரைவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என கூறினார்.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், தமிழ் நாட்டிலிருந்து ஒரு குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டால் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.