முடிவடைந்தது கோட்டாபயவுக்கு கொடுத்த கால அவகாசம்…! இன்று மாலை வெளிவரவுள்ள வீடியோ ஆதாரம்: நடக்கப் போவது என்ன…!



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக  சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது திரும்பியுள்ளது. 

இந்த நெருக்கடி நிலையால் பொதுமக்கள் கடும்  அதிருப்திக்கு உள்ளான நிலையில் இந்த அதிருப்தி நிலை அரசியலிலும் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.  

பொருட்கள் விலையேற்றம், பற்றாக்குறை, வரிசைகளில் காத்திருப்பதன் மூலம் ஏற்பட்ட மரணங்களும் அதனால் பொதுமக்கள் அடைந்த வெறுப்புக்களுமே இன்றைய இலங்கையின் மாறுதல்களுக்கு காரணம் என்பது நிதர்சனமான உண்மை.  

இலங்கை வாழ் மக்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை மாத்திரம் அல்லாது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களையும் தங்களது பதவிகளை விடுத்து வீட்டுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றனர் என்பதை விட கட்டளை இடுகின்றனர் என கூறலாம். 

தங்களது உரிமைகளுக்காக, தேவைகளுக்காக  பொதுமக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் எப்படிப்பட்ட சாம்ராஜ்ஜியமும் சரிந்து போகும் என்பதற்கு இலங்கை அரசாங்கமும் ராஜபக்ச சகோதரர்களும், சகாக்களும் சிறந்த உதாரணம். 

மிகக் குறுகிய காலத்தில் கட்சியினை  வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று தொடர்ந்து மூன்று தேர்தல்களில் எதிர்பாராத பல வெற்றிகளைப் பெற்று பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறியவர்களே  ராஜபக்ச அரசும் அவர்களின் சகாக்களும். 

ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிய ஒரு பலத்தை காட்டி பெரும்பான்மையோடு பெரும்பான்மை இனத்தவர்களால் ஆட்சியை அமைத்தனர்.  

சுவர்களில் சித்திரம் வரைந்தும், வெற்றியைக் கொண்டாடியும் ஆர்ப்பரித்த அதே பெரும்பான்மை இன மக்களால்  இன்று வெறுக்கப்படும் ஒரு அவல நிலையை ராஜபக்ச அரசாங்கம் சந்தித்துள்ளது.  

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கோவிட் தொற்றினால் ஏற்பட்ட பின்னடைவு பிரதான காரணம் என அரசாங்கம் தம்பட்டம் அடித்து வந்தாலும்,  ராஜபக்சர்களின் பிழையான முகாமைத்துவமும் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.  

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் காரணமாக அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு  மக்கள் அடைந்த அதிருப்தி நிலையை துரும்பாக பயன்படுத்தி  ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவின் சாம்ராஜ்ஜியம் பதவிக்கு வந்து இரண்டரை வருடக் காலத்திற்குள் ஆட்டம் கண்டுவிட்டது.  

இந்த நிலையில்,  எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை என ஒவ்வொன்றுக்கும் வரிசை அமைத்து காத்திருந்த மக்கள் பொறுமை  இழந்து சிறிது சிறிதாக ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டினை முற்றுகையிடும் அளவுக்குச் சென்றது. 

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நள்ளிரவு தாண்டியும்  எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பிள்ளையார் சுழியாக ஆரம்பமான அந்த ஆர்ப்பாட்டத்தில் சூடு இன்று வரை தனிந்தபாடில்லை.  முன்வைக்கப்பட்ட கோசங்களுக்கு தீர்வு கிடைத்தப்பாடும் இல்லை. 

தொடர்ந்து ஊரடங்கு, பொது அவசரகால நிலை என சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டபோதும் எதற்கும் பொதுமக்கள் அடங்கிப் போகவோ சளைக்கவோ இல்லை.

அதன் காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் அமைதியான முறையில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.  இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் இருந்து ஆதரவுகள் பெறுகிவருகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும் எதிர்ப்புக்களும் தீவிரமடைந்துள்ளன.  

இவ்வாறான பின்புலத்திலேயே நேற்று முன்தினம் றம்புக்கனை நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக் காரர்கள் எரிபொருள் தாங்கிய பௌசருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். 

இந்த சம்பவம் இலங்கை மக்களிடத்தில் உச்சபட்ச கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேசமும் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. 

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சமயம் உலகில் பிரபலமாக அறியப்பட்ட அனோனிமஸ் என்ற ஹெக்கர்ஸ் குழு ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவதற்கு கால அவகாசம் வழங்கி வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதியும் பதவி விலகாத சூழலில் இன்று மாலை ஆறு மணிக்கு அனோனிமஸ் ஹெக்கர்ஸ் குழு பல உண்மைகளை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.  

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதலைப் பற்றிய ஆதாரங்கள் இந்த வீடியோவின் மூலம் வெளிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் இந்த வீடியோ ஆதாரத்தின் மூலம் இலங்கை அரசில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம், அல்லது சர்ச்கைள் தோற்றுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குண்டுத் தாக்குதலை வைத்து அரசியலுக்குள் நுழைந்த கோட்டாபயவின் அரசியல் பயணம் அதே குண்டுத் தாக்குதல் தொடர்பான குண்டுத் தாக்குதலை மையமாகக் கொண்ட வீடியோ ஆதாரத்தின் மூலம் அஸ்த்தமனமாகப் போகின்றது என சமூக வலைத்தள வாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என அனோனிமஸ் ஹெக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.gov.lk தங்கள் செயற்பாடுகளால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஹெக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊழல் அரசியல்வாதிகளின் செயல்களை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பல்வேறு இணையத்தயங்களில் ஊடுருவி வெளியிடுவதாக உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஹெக்கர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தின் இயந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக ஹெக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளமும் நேற்று காலை செயலிழந்திருந்த நிலையில், அது மீளமைக்கப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அனோனிமஸ் ஹெக்கர்கள் நேற்று இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் உகாண்டாவின் அரசாங்க இணையத்தளங்களையும் அணுக முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான பின்னணியின் இன்று மாலை வெளிவரப் போகும்  வீடியோ என்னென்ன மாற்றங்களை இலங்கை அரசியலில் கொண்டு வரப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.