முதல்வர்கள், மேயர்கள்… கனேடிய பிரமுகர்களுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி வைத்தியம்


கனேடிய முதல்வர்கள், நகர மேயர்கள், உளவுத்துறை மூத்த அதிகாரிகள் உட்பட பல எண்ணிக்கையிலான பிரமுகர்களுக்கு ரஷ்யா தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 61 கனேடியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம், பட்டியலில் குறிப்பிட்டுள்ளவர்கள் ரஷ்யாவுக்கு செல்ல தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் வளர்ச்சிக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு எதிரான வெறுப்பை செயல்படுத்துவதில் கனடா நிர்வாகம் முனைப்பு காட்டிவருவதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒட்டாவா மேயர் Jim Watson தெரிவிக்கையில், எப்போதும் ரஷ்யாவுக்கு செல்ல தாம் திட்டமிட்டதில்லை எனவும், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாம் எப்போதும் வரப்போவதில்லை எனவும், ரஷ்யா செல்வதால் ஏற்படும் எந்த ஆதாயமும் தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட்டா முதல்வர் Jason Kenney, கனடா மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem, Saskatchewan முதல்வர் Scott Moe, ஐக்கிய நாடுகள் சபைக்கான கனேடிய தூதரான பாப் ரே, நிதித்துறை துணை அமைச்சர் மைக்கேல் சபியா,

மனிடோபா முதல்வர் Heather Stefanson, ரொறன்ரோ நகர மேயர் John Tory, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உட்பட மொத்தம் 61 பேர்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.