சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே.7-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக்காக 3 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை மத்திய நீர்வளத் துறை அமைத்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு அந்த கண்காணிப்புக் குழுவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணை மேலாண்மைக்காக, 2 தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழகம் மற்றும் கேரளா சார்பில் சேர்க்கும்படி அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை, முல்லை பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநராக நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Source link