மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரப் பாதை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த, ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரையில் உள்ள கழிவறை, நடைமேடை, பூங்காக்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார்.