ஐரோப்பிய நாடு ஒன்றில் உக்ரேனிய வீரர்களுக்கு அமெரிக்க ஆயுத பயிற்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது, உக்ரைனுக்கு வெளியே ஐரோப்பிய நாடு ஒன்றில் ரகசியமான இடத்தில் வைத்து அமெரிக்காவின் 155mm Howitzers-ஐ பயன்படுத்த உக்ரேனிய வீரர்களுக்கான பயிற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
புதிததாக வழங்கப்பட்ட அமெரிக்காவின் பீரங்கிகளை உக்ரேனிய ராணுவம் பயன்படுத்துவதற்கான முயற்சித் தொடங்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று 18 அமெரிக்க 155mm Howitzers பீரங்கிகள் சரக்கு விமானம் மூலம் ஐரோப்பியா வந்தடைந்தது மற்றும் இன்னும் கூடுதலாக வந்துக்கொண்டிருக்கின்றன.
முதலையுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்! புடின் மீது போரிஸ் ஜான்சன் காட்டம்
ஐரோப்பியாவில் வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், பீரங்கிகள் தரை வழியாக நேரடியாக உக்ரைனுக்கு எடுத்துச்செல்லப்படும் என மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் கூடுதலாக 4 படைப்பிரிவு குழுவை ரஷ்ய களமிக்கியுள்ளதாகவும், இதில் ஒரு பிரிவு டான்பாஸில் களமிறங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.