ரஷ்யாவுடனான அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்த உள்ளதாக, இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில் சர்வதேச அளவில் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியாளராக இருந்து வரும் டாடா, உக்ரைனுக்கு தங்களது ஆதரவினை காட்டும் விதமாக ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டிக்கும் என தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீலுக்கு ரஷ்யாவில் எந்த விதமான செயல்பாடுகளோ அல்லது ஊழியர்களோ இல்லை. எனினும் இரும்பு உற்பத்திற்கு தேவையான சில மூலதனங்களை இறக்குமதி செய்கிறது.
மாஸ்டர் பிளான் போடும் ரஷ்யா.. இந்தியாவுடன் பேச்சு வார்த்தை.. தீர்வு கிடைக்குமா?
ரஷ்யாவுடன் எந்த உறவும் வேண்டாம்
டாடா ஸ்டீல் நிறுவனம் தனது இரும்பு உற்பத்திக்காக, ரஷ்யாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து வருகின்றது. இந்த நிலையில் தான் ரஷ்யாவுடனான வணிகத்தினை நிறுத்த முடிவெடுத்துள்ளோம் என நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவுடனான வணிகத்தினை நிறுத்திய சில இந்திய நிறுவனங்களில் டாடா ஸ்டீலும் ஒன்றாக இருக்கும்.
இந்தியா தடையில்லை
இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த தடையையும் விதிக்கவில்லை என்ற நிலையிலும் கூட, டாடா ஸ்டீல் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அண்டை நாடுகளுடனான டாடாவின் வணிகத்தினை பாதிக்கலாம் என்ற நிலைக்கு மத்தியில் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்தியா தடையில்லை
இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த தடையையும் விதிக்கவில்லை என்ற நிலையிலும் கூட, டாடா ஸ்டீல் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அண்டை நாடுகளுடனான டாடாவின் வணிகத்தினை பாதிக்கலாம் என்ற நிலைக்கு மத்தியில் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
மாற்று வழி என்ன?
இந்தியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் உள்ள டாடா ஸ்டீலின் அனைத்து உற்பத்தி தளங்களும், ரஷ்யாவினை நம்பியிருப்பதை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு மாற்று ஆதாரங்களை நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இது தான் காரணமா?
இது ரஷ்யாவுடன் வணிகத் தொடர்பில் இருந்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், டாடா ஸ்டீல் உடனான வணிக உறவினை முடித்துக் கொள்ளலாம். அதோடு டாடா ஸ்டீல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியின் அளவு மிகச் சிறியது தான். ஆக டாடா ஸ்டீல் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம்.
தாக்கம் இருக்கலாம்
ரஷ்யாவுடனான அதன் வணிக தடையானது, டாடா ஸ்டீலின் வணிகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தாது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் தங்களது வணிகத்தினை முறித்துக் கொண்டால், அது மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஆக நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
TATA Steel plans to stop doing business with Russia; do you know why?
TATA Steel plans to stop doing business with russia: do you know why?/ரஷ்யாவுடனான வணிக உறவே வேண்டாம்.. டாடா ஸ்டீல் எடுத்த அதிரடி முடிவு..ஏன்?