ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நாடுகள் எவை? தொடர்ந்து வாங்கும் நாடுகள் எவை?

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதையடுத்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, அமெரிக்கா ஆகியவை ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீது முழுமையான தடைகளை விதித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்கள் தடையை ஏற்க முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரம் மட்டுமின்றி எண்ணெய் சந்தையான ஜெர்மனி, கோடையில் ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை பாதியாகக் குறைத்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் ரஷ்யா தேவையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பா நாடுகளை சேர்ந்த பலர், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் தங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என கருதி, ஸ்பாட் சந்தையில் தானாக முன்வந்து வாங்குவதை நிறுத்திவிட்டனர். நீண்ட கால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்கள், அவை காலாவதியாகும் போது கொள்முதலை முழுமையாக நிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

முக்கிய உலகளாவிய வர்த்தக நிறுவனங்கள், மே 15 முதல் ரஷ்யா அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கச்சா மற்றும் எரிபொருள் வாங்குவதைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடியாக, ரஷ்யா தனது எரிசக்தி ஏற்றுமதியை மேற்கு நாடுகளிலிருந்து நட்பு நாடுகளுக்கு திருப்பி விடுவதாக அச்சுறுத்தியது. அதே நேரத்தில் உள்நாட்டு நுகர்வையும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவும், இந்தியாவும் மறுப்பு தெரிவித்ததால், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இரண்டு நாடுகளும் தொடர்ந்து வாங்குகின்றன.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, பிப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகும் குறைந்தபட்சம் 16 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை முன்பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டில் வாங்கியதைப் போலவே அதன் எண்ணிக்கை இருப்பதாக, ராய்ட்டர்ஸ் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவோர் பட்டியல்

பாரத் பெட்ரோலியம்

இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், வர்த்தகர் ட்ராஃபிகுராவிடம் இருந்து மே மாதத்திற்காக 2 மில்லியன் பீப்பாய்களில் ரஷியன் யூரல்களை வாங்கியுள்ளதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னிந்தியாவில் கொச்சி சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்கு 310,000 பீப்பாய்களில் (bpd) ரஷ்ய யூரல்களை நிறுவனம் வழக்கமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.

ஹெலனிக் பெட்ரோலியம்

கிரேக்கத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், அதன் உட்கொள்ளலில் சுமார் 15% ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியுள்ளது. இந்நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவிலிருந்து கூடுதல் பொருட்களைப் பெற்றுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம்

கடந்த வாரம், இந்தியாவின் மாநில சுத்திகரிப்பு நிறுவனம் 2 மில்லியன் பீப்பாய்களில் ரஷியன் யூரல்களை மே மாதத்திற்காக வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்

இந்தியாவின் டாப் சுத்திகரிப்பு நிறுவனம், பிப்ரவரி 24 முதல் 6 மில்லியன் பீப்பாய்கள் யூரல்களை வாங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பீப்பாய்களில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு, ரோஸ் நேஃப்ட் நிறுவனத்துடன் சப்ளை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், சென்னை பெட்ரோலியம் துணை நிறுவனம் சார்பாகவும் கச்சா எண்ணெய் வாங்கும் சுத்திகரிப்பு நிறுவனம் ,யூரல்ஸ் உட்பட பல உயர் சல்பர் கச்சா தரங்களை அதன் சமீபத்திய டெண்டரில் இருந்து விலக்கியுள்ளதாக வர்த்தக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ISAB

இத்தாலியின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை, லுகோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட லிடாஸ்கோ எஸ்ஏ நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனம் ரஷ்யா மற்றும் ரஷ்யன் அல்லாத கச்சா எண்ணெய்களை பிராசஸ் செய்கிறது.

LEUNA

கிழக்கு ஜேர்மனியில் உள்ள நிலியூனா சுத்திகரிப்பு ஆலையின் பங்குகள் பெரும்பான்வை டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனத்திற்கு ட்ருஷ்பா குழாய் மூலம் ரஷ்ய கச்சா எண்ணெய் வழங்கப்படுகிறது.

மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ்

அரசு நடத்தும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனம் 1 மில்லியன் பீப்பாய்களில் ரஷியன் யூரல்ஸ் கச்சா எண்ணெய்யை, மே லோடிங்கிற்காக ஒரு ஐரோப்பிய வர்த்தகரிடமிருந்து டெண்டர் மூலம் வாங்கியுள்ளது. இது தள்ளுபடியில் கிடைக்கப்பட்ட மிகவும் அரிய கொள்முதல் ஆகும்.

MIRO

ஜேர்மனியின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையான மிரோவில் 24% ரோஸ் நேபிட் நிறுவனத்திற்கு சொந்தமானது.அதன் உட்கொள்ளலில் சுமார் 14% ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியுள்ளது.

MOL

குரோஷியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் மூன்று சுத்திகரிப்பு ஆலைகளை இயக்கும் ஹங்கேரிய எண்ணெய் குழு, ட்ருஷ்பா குழாய் வழியாக ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து வாங்குகிறது. அதேசமயம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடைகளை ஹங்கேரி எதிர்க்கிறது.

NAYARA ENERGY

இந்திய தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எனர்ஜி, Rosneft க்கு சொந்தமானது. இந்நிறுவனம், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளது. வர்த்தகர் Trafigura விடம் இருந்து சுமார் 1.8 மில்லியன் பீப்பாய்கள் யூரல்களை வாங்கியுள்ளது.

NEFTOCHIM BURGAS

ரஷ்யாவின் லுகோயிலுக்குச் சொந்தமான பல்கேரிய சுத்திகரிப்பு ஆலை, அதன் உட்கொள்ளலில் சுமார் 60% ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெயைத் தொடர்ந்து சுத்திகரித்து வருகிறது.

PCK SCHWEDT

ஜெர்மனியின் PCK Schwedt சுத்திகரிப்பு ஆலை, 54% Rosneft க்கு சொந்தமானது. Druzhba குழாய் வழியாக கச்சா எண்ணெய் பெறுகிறது.

PERTAMINA

இந்தோனேசிய அரசு எரிசக்தி நிறுவனமான PT Pertamina, புதிதாக புதுப்பிக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைக்கு எண்ணெய் தேடும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க பரிசீலித்து வருகிறது.

PKN Orlen

போலந்தின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெயை ஸ்பாட் மார்க்கெட்டில் வாங்குவதை நிறுத்திவிட்டது. இருப்பினும், இந்தாண்டு இறுதி வரை அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் முன்பு கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் கீழ் யூரல்களை இன்னும் வாங்கு வருகிறது.

லிதுவேனியா, போலந்து,செக் குடியரசில் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கும் நிறுவனம், ரஷ்ய எண்ணெய்க்கு கிடைக்கும் தள்ளுபடி மூலம் மார்ச் மாதத்தில் சுத்திகரிப்பில் நன்கு லாபத்தைக் கண்டுள்ளது.

ROTTERDAM REFINERY

எக்ஸான் மொபில் ரோட்டர்டாமில் உள்ள டச்சு சுத்திகரிப்பு ஆலை, ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்துகிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

SINOPEC

சீன அரசு நடத்தும் சினோபெக், முன்னர் கையொப்பமிடப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குகிறது. ஆனால் புதிய ஸ்பாட் ஒப்பந்தங்களில் இருந்து விலகி உள்ளது.

ZEELAND REFINERY

லுகோயிலுக்குச் சொந்தமான 45% டச்சு சுத்திகரிப்பு ஆலை, ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்துகிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியவர்கள்

BP

Rosneft-இல் உள்ள தனது பங்குகளை கைவிடும் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனம், “விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இன்றியமையாததாக இல்லாவிட்டால், ரஷ்ய துறைமுகங்களில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்கு ரஷ்ய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது என தெரிகிறது.

ENEOS

ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது. தே நேரத்தில் முந்தைய ஒப்பந்தங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட சில சரக்குகள் ஏப்ரல் வரை ஜப்பானுக்கு வருகின்றன. இந்நிறுவனம் மத்திய கிழக்கில் இருந்து பொருட்களை பெற திட்டமிட்டுள்ளது.

ENI

இத்தாலிய அரசாங்கத்திற்கு சொந்தமான 30.3% எரிசக்தி குழு ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துயுள்ளது. ஜேர்மனியின் பேயர்னாய்ல் சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு ENI

இத்தாலிய அரசாங்கத்திற்கு சொந்தமான 30.3% எரிசக்தி குழு ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துகிறது. ஜேர்மனியின் பேயர்னாய்ல் சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படாது, இதில் எனி மற்றும் ரோஸ்நேஃப்ட் பங்குகள் உள்ளன.

EQUINOR

நோர்வே அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனம் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது. ஏனெனில் நாட்டிலும் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

GALP

போர்த்துகீசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், ரஷ்யா அல்லது ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பெட்ரோலியப் பொருட்களின் அனைத்து புதிய கொள்முதல்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

GLENCORE

Rosneft இல் 0.57% பங்குகளை வைத்திருக்கும் உலகளாவிய சுரங்க மற்றும் வர்த்தக நிறுவனம், முன்பு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் அதன் பொருள்களை வாங்குகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட அரசின் அதிகாரிகள் வழிகாட்டுதல் இல்லாமல், ரஷ்ய வம்சாவளி பொருட்கள் தொடர்பாக எந்த புதிய வர்த்தக வணிகத்திலும் அந்நிறுவனத்தால் ஈடுபட முடியாது என கூறுகிறது.

NESTE

ஃபின்னிஷ் சுத்திகரிப்பு நிறுவனம் போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை ஸ்பாட் சந்தையில் வாங்கவில்லை. தற்போதுள்ள நீண்ட கால விநியோக ஒப்பந்தம் ஜூலையில் முடிவடையும் போது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமில்லை என தெரிவித்துள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, ரஷ்ய கச்சா எண்ணெயில் 85சதவீதத்தை, மற்ற கச்சா எண்ணெய்களுக்கு மாற்றிவருகிறது.

PREEM

சவூதியின் பில்லியனர் முகமது ஹுசைன் அல்-அமுதிக்கு சொந்தமான ஸ்வீடனின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனம், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான புதிய ஆர்டர்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது அதன் கொள்முதல்களில் சுமார் 7% ஆகும். அவற்றை வட கடல் பீப்பாய்கள் மூலம் மாற்றியமைத்தது.

REPSOL

ஸ்பாட் சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை ஸ்பெயின் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

ஷெல்

உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய வர்த்தகரான ஷெல், ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தியது மட்டுமின்றி அனைத்து ரஷ்ய ஹைட்ரோகார்பன்களிலும் அதன் ஈடுபாட்டை படிப்படியாக நீக்க தொடங்கியுள்ளது.

TOTAL ENERGIES

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வாங்குவதை நிறுத்துவதாக பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் உறுதியளித்துள்ளது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது எனவும் அறிவித்துள்ளது.

VARO ENERGY

ஜேர்மனியின் Bayernoil சுத்திகரிப்பு ஆலையில் 51.4% பங்குகளை வைத்திருக்கும் சுவிஸ் சுத்திகரிப்பு நிறுவனம், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் எண்ணமில்லை என்று கூறியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.