நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வையப்பமலையில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்த கவுரி சங்கர் என்பவர் வேலை முடிந்து தன் சொந்த ஊரான கோப்பம்பட்டி நோக்கி சென்றுள்ளார்.
நடுவழியில் எதிரே வந்த லாரி மீது கவுரி சங்கரின் டூவீலர் மோதியதில் சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். விபத்தில் தொடர்புடைய லாரி தப்பிய நிலையில் சிசிடிவி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.