பாமகவின் மறைந்த தலைவர் காடு வெட்டி குருவின் மகளும் அண்ணாமலைக்கு வன்னியர் விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே. இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே. ஆனால் இன்று அண்ணாமலை வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.
வாய் திறக்காத பாஜக எம்எல்ஏக்கள்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, காங்கிரஸ் போன்றவை வன்னியர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பொழுது பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர்.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை அண்ணாமலை எதிர்ப்பது நல்லதல்ல. வன்னியர் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலையையும் பாஜகவையும் நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. எங்களை துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்
மிஸ்டர் அண்ணாமலையையும் பாஜகவையும் புறக்கணிக்கனும்
நம் 3 கோடி வன்னியர் குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது நாம் அனைவரும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். நீங்கள் அனைவரும் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கலாம். நமது உரிமைகளுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி எதிர்ப்பது நமது கடமை.
எனவே நம் வன்னியர் மக்கள் மிஸ்டர் அண்ணாமலையையும் பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டியார் மகளாக கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.