"ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகள் பண்ண தயக்கம் இருக்கு. ஏன்னா…"- பிரியா பவானி சங்கர் Exclusive

அதர்வாவுடன் `குருதி ஆட்டம்’, சிம்புவுடன் `பத்து தல’, அருண் விஜய்யுடன் `யானை’ என நிறைய படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது அசோக் செல்வனுடன் `ஹாஸ்டல்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அந்தப் படம் குறித்தும் தன் கரியர் குறித்தும் பேசியிருக்கிறார்.

‘ஹாஸ்டல்’ படத்தோட கதை உங்ககிட்ட எப்படி வந்தது?

“மலையாளத்துல வெளியான ‘அடி கப்யாரே கூட்டாமணி’ (Adi Kapyare Kootamani) படத்தோட ரீமேக்தான் ‘ஹாஸ்டல்’. எப்போவும் மலையாள சினிமாவுடைய மீட்டர் மற்றும் ஹ்யூமர் வேற. என்கிட்ட ஸ்க்ரிப்ட் வந்தது. பொதுவா ரீமேக்னா, நல்லாயிருக்குற கதையை ஏன் திரும்பவும் நடிக்கணும்னு யோசிப்பேன். ‘ஓ மணப்பெண்ணே’ படத்தோட ரீமேக் வந்த போதும் இதை யோசிச்சு இருக்கேன். ஆனா, பரீட்சையமான கதையை நம்ம ஊருக்குப் பிடிச்ச மாதிரி கொடுக்குற அளவுக்கு ‘ஹாஸ்டல்’ ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் ரெடி பண்ணியிருந்தார்.

ஹாஸ்டல்

“லாக்டௌன் முடிஞ்ச நேரத்துல ஸ்டார்ட் பண்ணோம். ரொம்ப ஜாலியா இருந்தது. எங்களுடைய ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க பசங்கதான் இருப்பாங்க. பாய்ஸ் ஹாஸ்டல் உள்ள போயிட்டு வந்த பீலிங்தான் கிடைச்சது. எல்லாரும் எப்போவும் ஏதாவது கதைப் பேசிக்கிட்டு இருப்போம். எப்போவும் சுத்தி பசங்கயிருந்தாலும் சங்கடமான பீலிங் எதுவும் வராதளவுக்கு யூனிட் இருந்தது. யாரையாவது முதல்ல பார்த்தா என்ன பேசன்னு யோசிப்பேன். பழகக் கொஞ்சம் டைம் எடுக்கும். இந்த ஸ்பாட்ல கூட கொஞ்ச நேரம் அப்படியிருந்தது. அப்புறம் எல்லாரும் நல்லா செட்டாகிட்டோம்.”

உங்க காலேஜ் லைப் எல்லாத்தையும் இந்தப் படம் ஞாபகப்படுத்தி இருக்குமே?!

“காலேஜ் படிச்சப்போ ரெண்டு வருஷம் ஹாஸ்டல்ல இருந்த அனுபவம் இருக்கு. காலேஜ் ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும் ஹாஸ்டல் எப்போவும் ஜாலியாயிருக்கும். இருபத்திநாலு மணி நேரமும் ப்ரெண்ட்ஸ் கூட இருந்த நேரமிது. ரொம்ப மறக்க முடியாத வாழ்க்கையை ஹாஸ்டல் கொடுத்திருக்கு. இந்தப் படமும் கூட அப்படிதான் ரொம்ப ஜாலியா ஃபன்னா இருந்தது. சொல்லப்போனா படத்துல நடிச்சிருக்குற எல்லாரும் குரூப் இன்டர்வியூ கொடுத்தா ஒவ்வொருத்தரும் மத்தவங்களை அவ்வளவு கலாய்ச்சிப்போம். அப்படியொரு டீம் இது!”

ஹாஸ்டல்

அசோக் செல்வனுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றி…

“அசோக் செல்வன் கூட இது எனக்கு முதல் படம். ஆனா, முதல்ல இருந்தே நல்ல நட்பு எங்களுக்குள்ள இருந்தது. எப்போ எங்கேயிருந்து இந்த ப்ரெண்ட்ஷிப் ஸ்டார்ட் ஆச்சுனு ஞாபகமில்ல. இந்த ஸ்க்ரிப்ட் வந்தப்போ ஹீரோவா அசோக் செல்வன் நடிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. நானே அசோக்குக்கு கால் பண்ணி பேசினேன். ஆனா, கால்ஷீட் பிரச்னையிருந்தது. ‘வேண்டாம்னு’ சொல்லிட்டார். அப்புறம் ப்ரெண்ட்ஷிப்னால பண்ணிக் கொடுத்தார். உரிமையா கேட்டு பண்றளவுக்கு எங்களுக்குள்ள நட்பு இருக்கு. ரொம்ப நல்ல மனுஷன் அசோக் செல்வன். இதுக்கு முன்னாடியே சில படங்கள் நாங்க பண்ற மாதிரியிருந்து டிராப் ஆகியிருக்கு. அந்தப் படங்கள் ஹிட்டாகுறப்போ, ‘அடப்பாவி நான் பண்ணியிருக்க வேண்டிய கேரக்டர்னு’ போன் பண்ணி கலாய்ச்சிப் பேசிக்குவோம். ரொம்ப நாளா ஒண்ணா வேலைப் பார்க்க நினைச்சிட்டிருந்தோம். ‘ஹாஸ்டல்’ படத்துல அது நிறைவேறியிருக்கு.”

வீட்டுல உங்க படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்றாங்க?

“சினிமால நடிக்குறது அவங்களுக்குச் சந்தோஷம். ஏன்னா, நான் சந்தோஷமா இருக்கேன்ல! எப்போவும் என்னோட படங்கள் பார்த்துட்டு அவங்ககிட்ட இருந்து நேர்மையான கமென்ட்ஸ் வரும். என்னோட ப்ரெண்ட்ஸ்கூட அப்படிதான். பட், எல்லாரும் ரொம்ப ஹேப்பிதான்.”

பிரியா பவானி சங்கர்

கதைக்கு முக்கியத்துவம் இருக்குற படங்களைத் தாண்டி, உங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கான்னு பார்க்குறது பற்றி?

“ஹீரோயின்ஸூக்கு மார்க்கெட் இங்கே குறைவு. நிறைய ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகள் வரும். ஆனா, அதை இங்கே மார்க்கெட் பண்றது கஷ்டம். நான் நடிக்குற படத்தை நானே பார்த்தாதான் உண்டு. எத்தனை பேர் தியேட்டருக்கு வருவாங்க?! நம்ம ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்குற கதையை செலக்ட் பண்ணும்னா அந்த இடத்துக்கு முதல்ல ஸ்ட்ராங்கா வரணும். சோ, அதுக்கு கமர்ஷியல் வெற்றிப் படங்கள் முதல்ல தேவை. அப்போதான் பிராண்ட் கிடைக்கும். கமர்ஷியல் படங்கள் பண்ணும் போதுதான் ஆடியன்ஸ் அதிகம் கிடைப்பாங்க. நம்மளும் அதிகமா ரீச் ஆகுவோம். கமர்ஷியல் படங்களிலும் எனக்கு முக்கியத்துவம் கொடுக்குற கேரக்டர் கிடைக்குறதுக்கு நன்றி சொல்லணும். இன்னும் நிறைய கமர்ஷியல் படங்கள் நடிக்கணும்னு நினைக்குறேன். சினிமாவுக்கு வந்த புதுசுல வந்த நிறைய கேரக்டர்ஸ் பண்ணமா விட்டிருக்கேன். ஏன்னா, எனக்கு சரியான பாதையைச் சொல்லிக் கொடுக்க யாருமில்ல. இந்த வழியே போகணும், அப்போதான் கரியர் வளர்ச்சி இருக்கும்னு தெரியல. இப்போ எல்லாத்தையும் பார்த்து கத்துட்டு வரேன். பெரிய ஹீரோஸ் படங்கள் எல்லாமே பண்ணிட்டு வரேன்.”

சிம்புகூட ‘பத்து தல’ படம் அனுபவம்?

“இப்போதான் படத்தோட ஷூட்டிங் போயிட்டு இருக்கு. ஒரு ‘ஹீரோ’ பிம்பப் படத்துல ஹீரோயினுக்கு ஸ்பேஸ் இருக்குறது ரொம்ப குறைவு. சில நேரங்களில்தான் அது கிடைக்கும். கன்னடப் பட ரீமேக்தான் ‘பத்து தல’. அதுல ஹீரோயின் கேரக்டர் இருக்காது. ப்ரெண்ட் கேரக்டர்தான் இருக்கும். அந்தப் படத்துக்கு அது சரியா இருந்திருக்கும். ஆனா, இந்தக் கதையை என்கிட்ட சொன்னப்போ நல்ல ரோல் கண்டிப்பா பண்றேன்னு ஒத்துக்கிட்டேன்.”

பிரியா பவானி சங்கர்

சமீபத்துல ஒரு நெட்டீசனுக்கு நீங்க கொடுத்த பதில் பற்றி?

“சில கமென்ட்ஸ் வந்துக்கிட்டே இருக்கும். அதை நம்ம நிறைய டைம் தவிர்த்திருப்போம். அதை வெச்சு சிலர் கன்டென்ட் எடுத்து பேசுறதால சிலதைத் தவிர்ப்போம்னு நினைச்சிக்குவேன். ஆனா, சில நேரம் அப்படியான கமென்ட்ஸை எதிர்த்துப் பேசணும்னு தோணும். எல்லா நேரமும் அமைதியா இருக்கணும்னு அவசியமில்ல.”

பிரியா பவானி சங்கரின் முழுமையான பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.