கொழும்பு -இலங்கையில், ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மூன்றுஎம்.பி.,க்கள் வாபஸ் பெற்றதையடுத்து, அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை பார்லிமென்டில் ௨௨௫ எம்.பி.,க்கள் உள்ளனர்.இதில், ௧௫௬எம்.பி.,க்கள் அதிபர்கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.நாட்டில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ௩௯எம்.பி.,க்கள் வாபஸ் பெற்றனர்.போராட்டம்இதையடுத்து, அதிபர் கோத்தபய பதவி விலக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
இந்நிலையில், அதிபருக்கு ஆதரவு அளித்து வந்த, மூன்று முஸ்லிம் எம்.பி.,க்கள் தங்கள் ஆதரவை நேற்று வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அவருக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.இதற்கிடையே, இலங்கை அரசுக்கு எதிராக கோகாலை மாவட்டம் ரம்புக்கெனா பகுதியில் நேற்று முன்தினம் பலர் போராட்டம் நடத்தினர்
.போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்; ௧௩ பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவுவதால், ரம்புக்கெனா பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உறுதிகடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அவசர கால உதவி செய்ய தயாராக இருப்பதாக, உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் நேற்று கூறுகையில், ”பெட்ரோல், டீசல் வாங்க, இலங்கைக்கு ௩,௫௦௦ கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக, இந்தியா தெரிவித்துள்ளது,” என்றார்.