டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரிட்டன் பிரதமர், போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’என்றார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, ‘பிரிட்டன் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது,’என்றார்.