அச்சச்சோ.. தங்கம் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்.. இன்று என்ன நிலவரம்?

இந்தியர்களுக்கு மிக பிடித்தமான உணர்வுபூர்வமான உலோகங்களில் ஒன்றான தங்கம் விலையானது, சமீப நாட்களாகவே அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

இந்த விலை விகிதமானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் மீடியம் டெர்மில் ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா? குறைந்தால் வாங்கி விடலாமே என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா?

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நின்று போன கோவில் விழாக்கள், திருமண விழாக்கள் என களை கட்டிக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டில் வரவிருக்கும் திருமண பருவம், அக்ஷய திருதியை உள்ளிட்ட விழாக்களும் களை கட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் நம்மவர்களின் விருப்பமான உலோகமான தங்கத்தினை வாங்கி குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு தேவை

முதலீட்டு தேவை

குழந்தை பிறப்பு முதல் வயதானவர்கள் இறப்பு வரை சீதனமாக கொடுக்கப்படுவது தங்கம் தான். அந்தளவுக்கு உணர்வுபூர்வமாக இருக்கும் தங்கத்தின் தேவையானது இனி வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பணவீக்கமும் எதிர்பாராத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில், முதலீட்டு தேவையினையும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
 

எதிர்பார்ப்பு

குறிப்பாக அக்ஷ்ய திருதியை நாளில் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கிக் குவிக்கலாம். இதுவும் தங்கம் மற்றும் வெள்ளி விலையியை மீடியம் டெர்மில் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 56000 ரூபாயினையும், வெள்ளி விலை 75000 ரூபாயினையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ஷய திருதி எப்போது?

அக்ஷய திருதி எப்போது?

வரவிருக்கும் மே 3 அன்று அக்ஷய திருதியை கொண்டாடாப்படவுள்ளது. ஆக இது நிச்சயம் தங்கத்தின் தேவையினை தூண்டலாம். ஆக முதலீட்டாளர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மில் நிச்சயம் நல்லதொரு லாபத்தினை கொடுக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

சீனாவும் ஆதரவு

சீனாவும் ஆதரவு

சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஈடுகட்ட, சீனா தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

மோசமான அரசியல் பதற்றம்

மோசமான அரசியல் பதற்றம்

உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் போக்கானது நாளுக்கு நாள் மிக மோசமான நிலையையே எட்டி வருகின்றது. ஆக இது இன்னும் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே ஆய்வு நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி குறித்தான மதிப்பீடுகளை கீழ் நோக்கி திருத்தம் செய்து வருகின்றன. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.

ஆதரவளிக்கும் காரணிகள்

ஆதரவளிக்கும் காரணிகள்

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கத்திற்கு ஆதரவாக பல காரணிகளும் சாதகமாகவே உள்ளன. இதுவரையில் மீடியம் டெர்மில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று இருந்த நிலை கூட மாறி, தற்போது மீடியம் டெர்மிலும் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக தங்கம் விலையானது வாய்ப்பினை கொடுக்கும் போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 5.60 டாலர்கள் அதிகரித்து, 1953.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் இதுவரையில் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது அதிகரித்து காணப்பட்டாலும், வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.615 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை இதுவரையில் உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 151 ரூபாய் அதிகரித்து, 52,564 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 71 ரூபாய் அதிகரித்து, 67,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 4965 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 39,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5416 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 43,328 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 54,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 90 பைசா குறைந்து, 72.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 721 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து, 72,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 22nd 2022: gold prices may go up in near term as demand picks up ahead of akshata tritiya

gold price on April 22nd 2022: gold prices may go up in near term as demand picks up ahead of akshata tritiya/ அச்சச்சோ.. தங்கம் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்.. இன்று என்ன நிலவரம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.