அதிக சூரிய ஒளியில் தோல் டேனிங் ஆகலாம், பலர் தோல் டேன் ஆக விரும்பினாலும், அதை அடைவது எளிதானது ஆனால் அகற்றுவது கடினம் என்பதை அறிந்திருக்க வேண்டும். எனவே, மக்கள் டேனிங் அகற்ற பல்வேறு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள், மேலும் சிலர் பாதுகாப்பற்ற நடைமுறையாக இருந்தாலும் தங்கள் சருமத்தை பிளீச் செய்கிறார்கள் என்று அழகு நிபுணர் பூஜா நாக்தேவ் கூறினார்.
“அதிர்ஷ்டவசமாக, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டேனை அகற்றலாம். வீட்டிலேயே இயற்கையாகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் டேனிங் அகற்ற நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய சில வைத்தியங்கள் இங்கே உள்ளன.
ஆரஞ்சு மற்றும் தேன்
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள்
ஆரஞ்சு தோல் தூள்
தேன்
செய்முறை
* அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து தோலில் சமமாக தடவவும். ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து கழுவவும்.
*”ஆரஞ்சு பழத்தில் ஹெஸ்பெரிடின் உள்ளது, இது தோல் பிக்மென்டேஷனை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூள், ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக உள்ளது, இது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த தோற்றமளிக்கும் சருமத்தை வழங்கும்,”
கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரி
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்
தேன்
கற்றாழை ஜெல்
செய்முறை
* வெள்ளரி கலந்து பேஸ்ட் செய்யவும். இதனுடன், தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* முழுவதும் அல்லது தோல் டேன் ஆன இடத்தில் தடவவும்.
“கற்றாழை ஜெல் மற்றும் தேன்’ பிக்மென்டேஷனை திறம்பட குறைக்கும் என்று அறியப்படுகிறது. சரியான முடிவுகளைப் பெற, பேஸ்டை 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு
உருளைக்கிழங்கு சாறு
செய்முறை
*சில உருளைக்கிழங்கை டைஸ் செய்து கூழ் எடுக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
“உருளைக்கிழங்கில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை மேற்பரப்பில் இருந்து இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இருப்பினும், சிலருக்கு எலுமிச்சை சாற்றை சருமத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, இதை பயன்படுத்துவதற்கு முன், ஒரு பேட்ச் சோதனையை உறுதிசெய்யவும்.
பால் மற்றும் குங்குமப்பூ
தேவையான பொருட்கள்
பால் (அரை கப்)
சில குங்குமப்பூ இழைகள்
செய்முறை
*குங்குமப்பூ இழைகளை பாலில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பாலை வடிகட்டி தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
* பயனுள்ள முடிவுகளைப் பெற, வாரத்திற்கு 1-2 முறை இதைப் பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“