அந்த மாதிரி படங்களை மறைக்கும் ஆப்பிள்!

ஆப்பிள்
நிறுவனம் தனது பயனர்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜிங் சேவையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

ஆப்பிளின் “செய்திகளில் தகவல் தொடர்பு பாதுகாப்பு” அம்சம், நிறுவனத்தின் செய்தி சேவையைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு அனுப்பப்படும் நிர்வாண கொண்ட படங்களை தானாகவே மங்கலாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த அம்சம் இப்போது இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்காக
iOS
, iPadOS மற்றும் macOS இல் உள்ள Messages ஆப்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

நிர்வாணப் படங்களுக்கு மாஸ்க்

இந்த மெசேஜுகள் கண்காணிக்கப்பட்டு மங்கலாக்கப்பட்டாலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை எந்த வகையிலும் பாதிக்காது என நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதாவது, எப்போதும் ஆப்பிள் சர்வர்கள் பயனர்களின் தனியுரிமைத் தகவல்களை தேவையில்லாமல் சேமிக்காது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அம்சமானது குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் படங்களை ஸ்கேன் செய்யும். பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கங்கள் ஏதும் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்யும்.

அப்படியான படம் கண்டறியப்பட்டால், படம் மங்கலாக முதலில் அனுப்பப்படும். அந்த படத்தை குறித்து பெறுநருக்கு தெரிவிக்கப்படும். அவர், அதில் கிடைக்கும் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி அந்த படத்தை பார்க்கவோ, நீக்கவோ, அனுப்பிய நபரின் எண்ணை பிளாக் செய்யவோ முடியும்.

வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!

சிக்கலில் சிக்கிய ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனர்களுக்கு ஆண் கருவுற்று இருப்பதை வெளிப்படுத்தும் எமோஜியை வெளியிட்டு உள்ளது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இத்துடன் திருநங்கைகளை குறிக்கும் எமோஜியும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரு எமோஜிக்களும்
ஐஓஎஸ்
15.4 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் மார்ச் மாதத்திலேயே வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக 35 எமோஜிக்களை வெளியிட்டுள்ளது. இதில் கருவுற்று இருக்கும் எமோஜி, இரு பாலினத்திற்கும் சமமான எமோஜி உள்ளிட்டவைகள் அடங்கும்.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஆண் கருவுற்று இருக்கும் எமோஜியை வெளியிட்டு இருந்தது. 2019 வாக்கில் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடி, திருநங்கை எமோஜி உள்ளிட்டவைகளை 2019 வாக்கில் வெளியிட்டதை அடுத்து தற்போது இந்த எமோஜிக்கள் வெளியாகி இருக்கின்றன.

இது ஆண் கருவுற்று இருக்கும் எமோஜி இல்லை என்றும் அது வெறும் தொப்பை தான் என்றும் ஆரம்ப கட்டத்தில் ஆப்பிள் வெளியிட்ட புது எமோஜிக்களை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், சிலர் ஆப்பிள் மீது கடும் எதிர்ப்பை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அம்சத்தை குறித்த கருத்துகளை கீழே பதிவிடுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.