ஆசிய விளையாட்டுக்கான இந்திய பேட்மிண்டன் அணியில் இடம்பெற்ற 14 வயது வீராங்கனை

புதுடெல்லி,
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் மே 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையும், ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் நடக்கிறது. 

இந்த மூன்று போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணிக்கு தரவரிசையில் டாப்-15 இடத்திற்குள் இருப்பவர்கள்
நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு 6 நாட்கள் டெல்லியில் தகுதி போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 பிரிவுகளில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை காட்டினர். அதில் வெற்றி பெற்றவர்களையும் சேர்த்து இந்திய பேட்மிண்டன் அணியை பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது. 
இதில் ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் 14 வயதே நிரம்பிய ‘இளம் புயல்’ அரியானாவைச் சேர்ந்த உன்னத்தி ஹூடா இடம் பெற்றுள்ளார். தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் தகுதி சுற்று போட்டியை புறக்கணித்ததால் அணியில் இடம் பெறவில்லை.
இந்திய பேட்மிண்டன் அணி வருமாறு:-
காமன்வெல்த் விளையாட்டுக்கான ஆண்கள் அணி: லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, சுமீத் ரெட்டி. பெண்கள் அணி: பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், திரீசா ஜாலி, காயத்ரி, அஸ்வினி. ஆசிய விளையாட்டு மற்றும் தாமஸ் – உபேர் க ோப்பைக்கான ஆண்கள் அணி: லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனாய்,
பிரியன்ஷூ ரஜவாத், சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர். அர்ஜூன், விஷ்ணு வர்தன், கிருஷ்ண பிரசாத் காரிகா. பெண்கள் அணி: பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா, உன்னத்தி ஹூடா, திரீசா ஜாலி, காயத்ரி, சிக்கி ரெட்டி, அஸ்வினி, தனிஷா கிரஸ்டோ, ஸ்ருதி மிஷ்ரா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.