எதிரிகளின் இலக்குகள் மீது மோதி வெடிக்கும் அதிநவீன டிரோன்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
தலைநகர் கீவை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்ட ரஷ்ய படைகள், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திருப்பின. சமதள பகுதியான டான்பாஸில், எதிரிகளின் இலக்கு மீது துல்லியமாக மோதி வெடித்து சிதறும் பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
ராணுவ வீரர்கள் எளிதாக பையில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இவ்வகை டிரோன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ள ஆயுதங்களுடன் சேர்த்து 121 பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன்களும் அனுப்பப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபோன்ற டிரோன்களை இயக்க உக்ரைன் வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே அமெரிக்காவில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.