புதுடில்லி-நம் நாட்டில் நடக்கும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில், 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது.
என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வசிக்கும் 1.26 கோடி இந்தியர்களில் 60 – 65 சதவீதம் பேர், இந்த தேர்தல்களில் ஓட்டளிக்க தகுதி யுடையோராக உள்ளனர். எனினும், இவர்களில், ஒரு லட்சம் பேர் மட்டுமே, பதிவு செய்து ஓட்டுரிமை பெற்றுஉள்ளனர். இவர்கள், தேர்தலின்போது, இந்தியாவுக்கு வந்து, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், ”வெளிநாடு வாழ் இந்தியர்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக ஓட்டளிக்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார்.வெளிநாடுவாழ் இந்தியர்கள், தபால் ஓட்டு வாயிலாக ஓட்டளிப்பதற்கு அனுமதி வழங்க, சட்ட திருத்தம் செய்யக்கோரி, மத்திய சட்ட அமைக்கத்திடம் தேர்தல் கமிஷன் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி-நம் நாட்டில் நடக்கும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில், 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.