தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் இன்றும் அரசே லாட்டரி சீட்டு விற்பனையை செய்து வருகிறது. இதன் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அத்துடன் அரசுக்கும் வருவாய் கிடைப்பதுடன், லட்சாதிபதிகள் ஆகும் வாய்ப்பு ஏழைகளுக்கும் அவ்வபோது கிடைத்து வருகிறது. இப்படியொரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு அண்மையில் அங்கு நிகழ்ந்துள்ளது.
காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (51) என்ற கூலித் தொழிலாளிக்கு
முதல் பரிசு
விழுந்தது. அவருக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
ஒரு அறை மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்துவரும் சண்முகம், தமக்கு லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் விழுந்திருப்பதை அறி்ந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள லாட்டரி பரிசுத் தொகையை கொண்டு புதிய வீடு கட்டவுள்ளதாக அவர் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.