புதுடெல்லி,
2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று (21ம் தேதி) இந்தியா வந்தார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார்.
ஆமதாபாதில் உள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இன்று முதல் நிகழ்ச்சியாக டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி செலுத்தினார்.அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார். போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.