ரிசர்வ் வங்கி இன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மக்களுக்கு வழங்குவது குறித்து வங்கிகளுக்கு, NBFC-களுக்கு, பின்டெக் நிறுவனங்களுக்கு ஒரு மாஸ்டர் அறிக்கை வெளியிட்டது.
ரூ.1 லட்சம் டூ ரூ.3 லட்சம்.. குறுகிய காலத்தில் அதிக லாபத்தை கொடுத்த டாடா பங்கு..!
இந்த அறிக்கையின் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழங்குவதிலும், பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர் பாதுகாப்பு அளிப்பதிலும் பல முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளது.
கிரெடிட் கார்டு
ரிசர்வ் வங்கியின் இந்த மாஸ்டர் அறிக்கையின் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வங்கிகளுக்குக் கூடுதல் பணிச் சுமை உருவாகியுள்ளது. கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களும் சரி, கிரெடிட் கார்டு வாங்குபவரும் சரி கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
ரிசர்வ் வங்கி
ஆர்பிஐ தொடர்ந்து வங்கி மற்றும் நிதியியல் சேவை துறையில் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பிரிவில் தற்போது முக்கியமான மற்றும் அவசியமான சீர்திருத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குபவர்கள் அதை ஆக்டிவேட் செய்வதற்கு அட்டைதாரரிடம் (கஸ்டமர்) இருந்து OTPஒப்புதலைப் பெற வேண்டும். மேலும் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தாமல் இருந்தால்.
30ஆம் நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு எந்தச் செலவும் இன்றிக் கிரெடிட் கார்ட் கணக்கை மூடப்படும்.
வங்கிகளுக்கு நஷ்டம்
புதுப்பிக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அட்டையாக இருந்தால் அட்டைதாரரின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்திய பின்பு கணக்கை மூடப்படும்.
இப்புதிய விதிமுறை மூலம் கிரெடிட் கார்டை வாங்கிய பின்பு பயன்படுத்தாமல் இருக்கும் இருப்போர் எண்ணிக்கை குறையும், மேலும் கிரெடிட் கார்டு-ஐ முடக்க இனி எவ்விதமான கட்டணமும், சுமையும் இல்லாமல் எளிதாக மூட முடியும்.
வங்கிகளுக்குச் சுமை
வங்கிகளைப் பொறுத்தவரை இப்புதிய விதிமுறை கூடுதல் சுமை. ஒரு வாடிக்கையாளரைப் பெறுவது மிகவும் விலை உயர்ந்த பணியாக வங்கிகளுக்கு விளங்கும் நிலையில், தற்போது20 சதவீத கார்டுகள் உண்மையில் 30வது முதல் 90வது நாள் வரை தான் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, புதிய வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினர் புதிய விதிகளின்படி கிரெடிட் கார்ட்-ஐ பயன்படுத்த மாட்டார்கள் என்பது போல் தெரிகிறது. இது வங்கிகளுக்குக் கூடுதல் நெருக்கடி.
கட்டண விபரம்
வங்கி ஒரு வாடிக்கையாளரைப் பெற்றவுடன், கிரெடிட் கார்டு குறித்து அனைத்துக் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் விபரத்தை வழங்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது.
இதில் குறிப்பாகச் சுழலும் வட்டி விகிதங்கள் குறித்து விபரம் முழுமையாக அளிக்க வேண்டும், இதேபோல் வட்டி விகித அடிப்படையில் உதாரணமாகக் கணக்கீட்டின் மாதிரி அந்த அறிக்கையில் இருக்க வேண்டும் வேண்டும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இன்சூரன்ஸ்
கார்டு வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் தொலைந்த கார்டுகள், கார்டு மோசடிகள் போன்றவற்றால் ஏற்படும் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள ஒரு காப்பீட்டு அளிக்கப்பட வேண்டும். 3ஆம் தரப்பு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இன்சூரன்ஸ் அளித்தால் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ ஒப்புதல் பெற வேண்டும்.
30 நாள் அவகாசம்
ஒரு வங்கி புதிய விதிகளை அறிவித்து, விதிகளைத் திருத்திய 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் கார்டை மூடலாம், மேலும் வங்கிகள் வெளியேற விருப்பத்தையும் அளிக்கிறது.
ஒரு கிரெடிட் கார்டு ஒரு வருடத்திற்குச் செயல்படாமல் இருந்தால், அதை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த பின்னரே மூட முடியும். மேலும் ஒரு கார்டை மூடுவதற்கு வங்கிகள் அதிகப்படியாக ஏழு நாட்களுக்கு மேல் எடுக்கக் கூடாது.
RBI’s New Credit And Debit Card Rules: How it Helps Customers
RBI’s New Credit And Debit Card Rules: How it Helps Customers கிரெடிட் கார்டு: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை.. வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட நன்மை..!