வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிரிட்டன் தூதரகத்தை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பிரதமர் மோடியிடம் இந்திய-பிரிட்டன் நல்லுறவு குறித்து விவாதித்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கி 50 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள பிரிட்டன் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீரடைந்துள்ள நிலையில் பிரிட்டன் அரசு உக்ரைனில் உள்ள தங்களது தூதரகத்தை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாதுகாப்பு கருதி தூதரகங்களை மூடியிருந்த பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தற்போது கீவ் நகரில் மீண்டும் தூதரகங்களை திறந்துள்ளன. உக்ரைன் ராணுவத்தின் தீவிர முயற்சி காரணமாகவே இது சாத்தியமானது என்று போரிஸ் ஜான்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement