covid 4th Wave, covid Fourth Wave Fear,Covid 4th Wave in India soon: அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் தமிழகத்திற்காக எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில்பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அதிக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது.
மேலும் சமீபத்தில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 3 அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
வட இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்புபோல் கோரண்டைன் இப்போது இல்லை. யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்காணித்து வருகிறோம்.
அப்படித்தான் இப்போது கண்றியப்பட்டு வருகிறது. முதல்வர் எப்போதுமே வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சொல்வார். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்து நாம் கவலைப்படவில்லை. அவர்கள் மருத்துவ ரீதியாக எப்படி இருக்கிறார்கள் என்பதை கண்கணித்து வருகிறோம். இதுவரை சோதனை செய்ததில், அனைவருக்குமே அதிகப்படியான பாதிப்புகள் இல்லை.
இந்த நேரத்தில் ஏற்றங்கள் அதிகமாக இருப்பதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் டெல்லி அளவுக்கு அதிகரிக்குமா என்று சொல்வது கடினம். ஆனால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்வது அவசியம். வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவும்போதே தமிழகத்தில் முன்னெச்சிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
எவ்வித தடையும இன்றி விழாக்களில் பங்கேற்றதால் டெல்லியில் கொரோனா பரவியது. அதனால் நாம் முககவசனம் அணிவதை வழக்கமாக கொண்டு வரவேண்டும். என்று கூறியுள்ளார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“