சாலை விபத்தில் 3 வயது குழந்தை பலி – முடிகாணிக்கை கொடுக்க கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்திருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மேலும் 3 பேர் காயங்களுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கு விலை பகுதியைச் சேர்ந்த சுயம்பு தாசன் என்பவரது மகன்கள் லிங்கேஸ் (வயது 36) மற்றும் சதீஷ் (வயது 34).
image
இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊரான ஆமணக்கு விலைக்கு குழந்தைக்கு முடி காணிக்கை செய்வதற்கு காரில் சென்றுள்ளனர். அப்பொழுது சாத்தூர் அருகே சித்திரெட்டிபட்டி விலக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் லிங்கேஷ் என்பவரது மகள் லியா ஆதிரா என்ற 3 வயது குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 6 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
image
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: “மின் பற்றாக்குறையை திமுக செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது” – அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.