விழுப்புரம் அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நன்னாட்டாம் பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் கிருஷ்ணா நிதியுதவிப் பள்ளி என்ற அந்தப் பள்ளியில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இங்கு ஆசிரியராகப் பணியாற்றும் பாபு 4ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தார் என்று கூறப்படுகிறது.
இதனையறிந்த கிராம மக்கள், பள்ளிக்குள் புகுந்து பாபுவை சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.