சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி,வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகம், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.