செல்வராகவனின் சாணிக்காயுதம் டீஸர் வெளியானது
ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சாணிக்காயுதம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்ஷன் திரில்லர் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் அழுத்தமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு இப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.