ஜம்மு:
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாரமுல்லா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜம்முவில் உள்ள சத்தா முகாம் அருகே இன்று மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
காலை பணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்புப் படை வீரர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...கர்நாடகத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை