புதுடில்லி: டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
2 நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று (21ம் தேதி) இந்தியா வந்தார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார்.
ஆமதாபாதில் உள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இன்று (ஏப்.22) முதல் நிகழ்ச்சியாக போரிஸ் டில்லி ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார்.
புதுடில்லி: டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.nsimg3013407nsimg2 நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.