உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை இனி கட்டாயமாக தனிமைப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு தாய்லாந்திற்கு வருபவர்கள் மே 1-ம் தேதி முதல் எந்தவிதமான சோதனையோ அல்லது தனிமைப்படுத்துதலோ செய்ய வேண்டியதில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா கூறுகையில், “நாடுகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. நாம் சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் நாடு. குறிப்பாக, இந்தக் காலங்களில் இது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும்” என்றார்.
இதையும் படியுங்கள்..
மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்காததால்தான் மின்தடை- அமைச்சர் செந்தில் பாலாஜி