மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ”விலை கடுமையாக உயர்ந்தபோதிலும் கடந்த ஓராண்டில் ஒரு டன் நிலக்கரி கூட இறக்குமதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் ஒருநாள் மின்உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே அளித்தது.
தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது; இதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாதபோதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இதையும் படிக்க: நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு! கைகொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM