Tamilnadu BJP Annamalai Press Meet : தலைமை நீதிபதி பங்கேற்கும் விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில்,
எந்த அமைச்சர்கள் வந்தாலும் தமிழகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வைத்துள்ள துறை மின்சார வாரியம் (டேன்ஜெட்கோ). அதனால் தான் இன்று தமிழகத்தின் மின்சார வாரியம் பல லட்சம் கோடி கடனில உள்ளது. 16 ஆண்டுகளாக இந்த துறையை அடிமட்டத்திற்கு கொண்டு வந்து இன்று மத்திய அரசின் மீது பழி போடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்
இந்த நூதன திருட்டுக்கு 2006-ம் ஆண்டு பிள்ளையார் சுழி போட்டது திராவிட முன்னேற்ற கழகம். இதற்கு இடையில் யார் ஆட்சியில் இருந்தாலும் கூட 2006-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கள். எந்த மாநிலத்திலும் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை இல்லை. ஆனால் தமிழகத்தில் 8 முதல் 10 மணி நேரம் வரை மின்தடை உள்ளது.
இந்த முதல்வர் எதையுமே செய்வது இல்லை. மோடியை குற்றம் சொல்கிறீர்கள் மத்திய அரசை குற்றம் சொல்கிறீர்கள் பாஜகவை குற்றம் சுமத்துகிறீகள் அப்படி என்றால் நீங்கள் எதற்காக தமிழகத்தில் ஆட்சியில் இருக்க வேண்டும்.. அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்துவிடுங்கள் நாங்களே நடத்திக்கொள்கிறோம்.
தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசிய அவர், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அவருக்கு அந்த விருது கிடைத்த பின்பு பாராட்டுவிழா நடத்தப்படும். தயவு செய்து அரசியல் காரங்களுக்காக இளையராஜா அய்யாவை கொச்சைப்படுத்தாதீர்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை. கவர்னரின் கான்வேயை தாக்கும் அளவுக்கு மக்கள் துணிந்துவிட்டார்கள். அதை காவல்துறை வேடிக்கை பார்த்தக்கொண்டிருக்கிறது.
2004-ம் ஆண்டு அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஐகோர்ட் விழாவில், தலைமை நீதிபதி பங்கேற்றும் போது, முதல்வர் பங்கேற்ற கூடாது. காரணம் அவர் மீது பிசிஏ கேஸ் இருக்கிறது.. அதனால் அந்த மேடையில் தலைமை நீதிபதியில் அருகில் அவர் சென்று அமர்ந்தால் மக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் இன்று தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதி மீதும் பிசிஏ கேஸ் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர் நாளை சென்னையில் நடக்க உள்ள நீதித்துறை விழாவில், ஒருப்பக்ம் இந்திய தலைமை நீதிபதி மறுப்பக்கம் தமிழக தலைமை நீதிபதியின் அருகில் அவர் எப்படி அமர முடியும். அன்று ஜெயலலிதாவுக்கு வந்த நிலைதைான் இப்போது ரகுபதி அவர்களுக்கும்.
அதனால் தான் அவர் இந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“