புது டில்லி: நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.
எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. இதன் மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட இருந்தது. மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ஏற்பட்ட ரஷ்யா – உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. கடுமையான ஏற்ற இறக்கத்துடன் சந்தை காணப்பட்டதால் அந்த சமயத்தில் நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீட்டை அனுமதிப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும் என எண்ணி ஒத்தி வைத்தனர்.
எல்.ஐ.சி., நிறுவனத்தினை ரூ.15 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யுமாறு செபியிடம் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மே 12க்குள் அதே தகவல்களுடன் பங்கு வெளியீட்டினை மேற்கொள்ளலாம். அந்த கால அளவை தாண்டினால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே பங்கு வெளியீட்டு தேதியை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி எல்.ஐ.சி.,யின் பங்குகளை 5 சதவீதத்துக்கும் மேல் அரசு இறக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.
Advertisement