BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் கடந்த 14ஆம் தேதி புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி
இளையராஜா
முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் திட்டங்களை பாராட்டியிருந்தார் இளையராஜா.
அதோடு அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட இளையராஜா, அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என புகழ்ந்திருந்தார். இளையராஜா இப்படி எழுதியிருந்ததுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். யார் என்ன சொன்னாலும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார் இளையராஜா.
இந்நிலையில் பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவிடம் போனில் பேசியதாகவும் தன்னையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசியதற்கு இளையராஜாவுக்கு நன்றி கூறியதாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அதாவது, ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கிானல் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்நாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு“ என்ற வரிகளை பாடி வீடியோவாக பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நான் பிஜேபி கிடையாது; மன்னிப்பு கேட்ட பாக்கியராஜ்!