கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள ஊரடங்கை, வரும் 26 ஆம் தேதி வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஷாங்காய்
, சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது.
இந்நிலையில், ஷாங்காய் நகரில், அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஷாங்காய் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில், 17 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது, நேற்று பதிவாகிய தினசரி பாதிப்பை விட 4.7 சதவீதம் குறைவு. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
சக பயணியை முகத்தில் குத்திய பிரபல குத்துச்சண்டை வீரர் – வீடியோ உள்ளே!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில், பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தேசிய சுகாதார ஆணைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 30 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.