வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: உக்ரைனின் பூச்சா நகரில் குடிமக்கள் பலர் ரஷ்ய படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, நேரலையில் கண்ணீர் சிந்தியபடி ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் இச்செய்தியை வாசித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் யுமிகோ மேட்சுவோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள பூச்சா நகரில், மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், குடிமக்கள் பலர் கொல்லப் படுவதாகவும் முன்னதாக செய்தி வெளியானது.
இதற்கு விளாடிமிர் புடின் அரசுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்த செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்த யுமிகோ மேட்சுவோ தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு சிறிது நேர இடைவெளிவிட்டு மீண்டும் செய்தியை வாசிக்க தொடங்கினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் ஜப்பானியர்கள் வெளிப்படையாக தங்கள் உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்ததற்குப் பாராட்டுக்கள் என கூறி பல இணையவாசிகள் அவரது இந்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.
Advertisement