முகேஷ் அம்பானி, ஜெப் பெசோஸ் மத்தியில் ஏற்கனவே பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டி முடியாமல் இருக்கும் நிலையில், தற்போது இருவரும் ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைக் கைப்பற்றப் போட்டிப்போடக் களத்தில் இறங்கியுள்ளனர். எப்போதும் இல்லாமல் இந்த வருடம் ஐபில் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த மாபெரும் வர்த்தகத்தைக் கைப்பற்ற குளாயடி சண்டை கூட நடக்கலாம்.
4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி..!
அப்படி இந்த ஐபிஎல் பிராட்காஸ்டிங் ஒப்பந்தத்தில் என்ன இருக்கு..? ஏகப்பட்ட விஷயம் இருக்கு பாஸ்..
ஐபிஎல் போட்டி
2021 ஐபிஎல் போட்டிகளின் மொத்த வியூவர்ஷிப் மட்டும் 242 பில்லியன் நிமிடம், இதில் ஒவ்வொரு நொடியும் பணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் உண்மை அதுதான். ஐபிஎல் போட்டிகள் மட்டும் அல்லாமல் பிற விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆஸ்திரேலியா நிறுவனம் தனது வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறியது எத்தனை பேருக்கு தெரியும்..
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
2017 ஆம் ஆண்டில் 5 ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப டிவி மற்றும் டிஜிட்டல் ஒப்பந்தத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுமார் 2.55 பில்லியன் டாலர் தொகை கொடுத்துக் கைப்பற்றியது. இதேவேளையில் பேஸ்புக் விளையாட்டுப் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்காக 600 மில்லியன் டாலர் கொடுக்கத் தயாரானது.
வளர்ச்சி
டிவி மற்றும் ஒளிபரப்பு துறையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் முதலீடு செய்யத் தயாராகிய நிலையில், இந்தப் போட்டியை சமாளிக்க முடியாது என உணர்ந்து ஆஸ்திரேலிய மீடியா தொழிலதிபர் தனது Century Fox நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
10 நொடிக்கு ரூ.17 லட்சம்
2017ல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றிய ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் மூலம் 10 நொடி விளம்பரத்திற்கு 17 லட்சம் ரூபாயைக் கட்டணத்தை வசூலித்து மிகப்பெரிய தொகையை லாபமாகப் பெற்றது. இந்நிலையில் இந்த வருடம் அணிகள் எண்ணிக்கை, போட்டி எண்ணிக்கை அனைத்தும் அதிகரித்துள்ளதால் ஒப்பந்த மதிப்பு 5 பில்லியன் டாலர் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 பேர் போட்டி
இதனால் பல புதிய நிறுவனங்கள் தற்போது ஐபிஎல் திட்டத்தைக் கைப்பற்றப் போட்டிப்போடத் தயாராகியுள்ளது. இதில் முக்கியமாக முகேஷ் அம்பானியின் நெட்வொக் 18, ஜெப் பெசோஸ்-ன் அமேசான் ப்ரைம், ஸ்டார் நெட்வொர்க், ஜீ-சோனி, ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bezos, Ambani fight over IPL broadcast deal
Bezos, Ambani fight over IPL broadcast deal நேருக்கு நேர் மோதும் முகேஷ் அம்பானி, ஜெப் பெசோஸ்..!