வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வதை தடுப்பதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், சட்டத்திற்கு புறம்பான நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணித்து தடுக்கும், எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
சர்வதேச நிதிச்சந்தையின் பாதுகாப்பு விஷயத்தில், எப்.ஏ.டி.எப்., முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பின் திட்டங்களுக்கு இந்தியா முழு ஆதரவு தந்து வருகிறது. குறிப்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி, ஆயுதக் கொள்முதல் ஆகியவற்றை தடுப்பதில் எப்.ஏ.டி.எப்., உடன் இந்தியா கைகோர்த்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எப்.ஏ.டி.எப்., அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். குற்றச்செயல்கள் மூலம் வாங்கப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு முழுமையாக மாறுவது மற்றும் முன்னுரிமை செயல்களுக்கு தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement