இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவாரன் அருகே உள்ள பாதுகாப்பு படையின் சோதனைச் சாவடியை நோக்கி நேற்று இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் ஷாகீத் பஷீர் கொல்லப்பட்டார். ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப் படைகள் உறுதியாக இருப்பதாக ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானில் தேசியவாத அமைப்பினர் மற்றும் தலிபான் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.