பவர்ஃபுல்லா OnePlus 10 வெளியாகும் – 150W வாட் பாஸ்ட் சார்ஜிங் இருக்காம்!

ஸ்மார்ட்போன் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும்
OnePlus
10 போனின் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. கிடைத்த தகவலின்படி,
ஒன்பிளஸ்
10 தொடரில் புதுமையான வெண்ணிலா மாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அதில் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒன்பிளஸ் 10 ஸ்மார்ட்போனில் நிறுவனம் 150W சக்திவாய்ந்த பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொடுக்க உள்ளது. மேலும், ப்ரோ போனில் உள்ளது போல ஸ்னாப்டிராகன் 3 ஜென் 1 பிளாக்‌ஷிப் புராசஸர் கொண்டும் ஒன்பிளஸ் 10 சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே வெளியாகும் என தகவல்கள் கசிந்த ஒன்பிளஸ் 10R, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் 5ஜி, ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் ஆகிய ஸ்மார்ட் கேட்ஜெட்ஸின் வெளியீட்டு நிகழ்வின் தேதியையும் தற்போது நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 28 ஆம் தேதி இந்த மூன்று கேட்ஜெட்ஸுகளும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

நோக்கியா இடத்திற்கு குறி: நறுக்குணு ரெண்டு பட்ஜெட் போன் – ரெட்மி 10ஏ; 10 பவர் அறிமுகம்!

ஒன்பிளஸ் 10 சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், LTPO 2.0 பேனல் வழங்கப்படலாம். OnePlus 10 ஸ்மார்ட்போனானது, இரண்டு புராசஸர்கள் கொண்டு சோதிக்கப்படுகின்றன. ஒன்று Qualcomm Snapdragon 8 Gen 1, மற்றொன்று MediaTek Dimensity 9000 சிப்செட் ஆகும்.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படலாம். OnePlus 10 போனானது, இந்த ஆண்டின் ஆக்ஸ்ட் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்டோரேஜ் மெமரிக்காக 128ஜிபி, 256ஜிபி என இருத் தேர்வுகள் வழங்கப்படலாம்.

புகைப்படம் எடுப்பதற்கு, OnePlus 10 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கலாம். மேலும் கிடைத்த தகவல்களின்படி, இதனுடன் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படலாம். கூடுதலாக 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் இருக்கலாம். செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம்.

எப்படி சாத்தியம்: கார்டு இல்லாமல் ஏடிஎம்-இல் பணம்!

OnePlus 10 கேமராக்கள் Hasselblad தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், OnePlus 10 போனை சக்தியூட்ட 4800mAh பேட்டரி கொடுக்கப்படலாம் என்றும், இதனை சக்தியூட்ட அதிவேகமான 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.