வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் ராணியாக அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ராணி எலிசபெத் வடிவில் பார்பி பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1952ம் ஆண்டு, பிப்.,6ல் தனது 25வது வயதில், பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் முடி சூட்டிக் கொண்டார். தற்போது அவர் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ‘பிளாட்டினம் ஜூப்ளி’யாக ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. இதன் மூலம் பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமை ராணி எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ராணியின் 96வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இரண்டு நிகழ்வுகளையும் சிறப்பிக்கும் விதமாக, பிரபல பொம்மை தயாரிக்கும் நிறுவனம், ராணியின் வடிவில் ‘பார்பி பொம்மை’யை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதில், எலிசபெத் தனது திருமணத்தின் போது அணிந்திருந்த கிரீடமும் இடம்பெற்றுள்ளது. 75 டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்ட ‘ராணி பார்பி’க்கு வரவேற்பு அதிகரிக்க, இதன் விற்பனை தற்போது சக்கை போடு போட்டு வருகிறது.
Advertisement