பிரசவம் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல- தனது பிரசவம் பற்றி மனம் திறந்த காஜல்



சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் இறுதியில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, காஜலின் கணவர் கௌதம் காஜல் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு காஜலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு நீல் கிட்சிலு என்று பெயரும் சூட்டியிருந்தார்கள்.

இந்நிலையில் காஜல் தன்னுடைய பிரசவ நேரம் எப்படி இருந்தது, அதற்குப் பிறகு உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன என்பவை குறித்து தனது காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது,

“பிரசவம் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதை நானும் அனுபவித்தேன். நடு ராத்திரி, அதிகாலையில் வழக்கத்தைவிட அதிகமாக ரத்தப் போக்கு, 3 நாட்கள் பகல், இரவாக தூக்கமில்லாமல் இருப்பது, தோள்பட்டை வலி, எலும்புகள் உறைந்தது போல ஒரு பதட்டம், உதிரப்போக்கின் ஒருவித துர்நாற்றம், மார்பகத்தில் ஏற்படும் மாறுதல்கள், தாய்ப்பாலை பம்ப் செய்ய பிரெஸ்ட் பம்ப் இப்படி பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிருக்கும்.

ஆனால் இது ஓர் இனிமையான வாழ்க்கையின் தொடக்கம் என்பதை புரிய வைத்த தருணம்.

பிரசவத்துக்குப் பின்பு என்னுடல் கவர்ச்சியாக இருக்கப் போவதில்லை. பிரசவ தழும்புகள், பாலூட்டும் மார்பகங்கள் என கவர்ச்சி குறைவாக தோன்றலாம்.

ஆனால் நான் முன்பை விட இன்னும் அழகாகவே இருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.