பிரித்தானியாவில் உக்ரேனிய துருப்புகளுக்கு ரகசிய பயிற்சி! கசிந்த முக்கிய தகவல்


பிரித்தானியாவில் ரகசியமாக உக்ரேனிய துருப்புகளுக்கு பிரிட்டிஷ் ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது சமீபத்திய கீவ் விஜயத்தின் போது, 120 ராணுவ வாகனங்களை அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு வாக்குறுதியளித்தார்.

இந்நிலைியல், இந்த ராணுவ வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய உக்ரேனிய போராளிகள் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய துருப்புக்கள் பிரிட்டிஷ் மண்ணில் ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நடக்கும் இடம் மற்றும் எத்தனை உக்ரேனிய வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வகையான பயிற்சி பெரும்பாலும் Wiltshire-ல் உள்ள Salisbury Plain-யின் ராணுவ பகுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.

தொழிற்சாலை மீது மோதி சிதறிய விமானம்.. பயணித்தவர்கள் அனைவரும் பலி 

உக்ரேனிய பாதுகாப்பு தளபதிகள் சமீபத்தில் ஸ்டோர்மர் ராணுவ ஏவுகணை ஏவுதலை, Salisbury Plain-யின் ராணுவ பகுதியில் இருந்த தான் கவினத்தனர் .

பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டோர்மர் அமைப்பு, ஜான்சனின் ராணுவ உதவி தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.