புடினை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச்செயலர்| Dinamalar

ஐ.நா: உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, தீவிர போர் நடைபெற்று வருகிறது. இது இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடந்த போதும் தீர்வு காணப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ன்டோனியோ குட்டரெஸ் வரும் 25-ம் தேதி ரஷ்யா செல்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடினையும். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.